
விசேட அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன் சிறையிலிருந்து வெளியேறிய பிள்ளையான்!
விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நாளைய தினம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காகவே இவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விரும்பு வாக்கினைப்பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.