
அரசுக்குள் வெடித்தது பிளவு! ருவான் வெளியிட்டுள்ள தகவல்
20வது திருத்தம் காரணமாக அரசாங்கத்துக்குள் பிளவு காணப்படுகின்றது என தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிதலைவர் ருவான் விஜயவர்த்தன ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட தயார் என தெரிவித்துள்ளார்
20வது திருத்தம் தேவையற்றது என தெரிவித்துள்ள ருவான் விஜயவர்த்தன, நாங்கள் நாட்டில் ஜனநாயகத்தை மீள நிலைநாட்டவும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை எடுத்து நாடாளுமன்றத்தின் கரங்களில் கொடுப்பதற்காகவும் 19வது திருத்தத்தை அறிமுகப்படுத்தினோம் என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் 20வது திருத்தம் நிறைவேற்று அதிகாரத்தை நோக்கி மீண்டும் செல்வதன் காரணமாக முழு விடயத்தையும் பின்னோக்கி நகர்த்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது சரியான விடயம் என நான் கருதவில்லை. அரசாங்கத்துக்குள்ளேயே 20வது திருத்தம் தொடர்பில் பிளவு ஏற்பட்டுள்ளது என நான்கருதுகின்றேன்.
20வது திருத்தத்தை கொண்டுவருவதற்கான சரியான தருணமிது என நான் கருதவில்லை, ஒரு நபரை அடிப்படையாக வைத்து நிறைவேற்று அதிகாரத்தை கொண்டுவருவதற்கான பொருத்தமான தருணமிது எனவும் நான் கருதவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.