கண்டியில் அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

கண்டியில் அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

கண்டி மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளனர்.

மெனிக்ஹின்ன வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி  தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்ப தெரிவித்து  இன்று காலை 8 மணிமுதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச அரசியல்வாதி ஒருவரினால் குறித்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த அரசியல்வாதி தொடர்ச்சியாக குழப்ப நிலைகளை ஏற்படுத்தி வந்துள்ளதுடன் இதுவரை எந்தவிதமான சட்டநடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படவில்லை என  அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்  கண்டி மாவட்ட செயலாளர்  வைத்தியர் பிரேமலால் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சந்தேக நபரை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.