
வத்தளை உட்பட பல்வேறு பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு
வத்தளையின் சில பகுதியில் இன்றிரவு 8 மணி முதல் 24 மணி நேர நீர்விநியோக தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.
ஹேகித்த பகுதியில் நீர் குழாய் பொருத்தும் பணிகள் இடம்பெறவுள்ளதால் இந்த நீர் விநியோக தடை அமுலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, வத்தளை, எவரிவத்தை, ஹேகித்தை, தெலகபாத, பள்ளியாவத்தை, வெலியமுன, பலகல, எலகந்தை ஆகிய பகுதிகளில் இன்று இரவு 8 மணிமுதல் 24 மணி நேரம் நீர்விநியோகதடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.