அடியோடு நிராகரித்தார் மைத்திரி!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு முன்னிலையில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ முன்வைத்துள்ள கருத்துக்களை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற விசாரணையில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற வேளை பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய பூஜித ஜயசுந்திர தாக்குதலுக்கான பொறுப்பையேற்று பதவிவிலகினால் அவரை வெளிநாட்டு தூதுவராக நியமிப்பதாகவும் ஓய்வுதீயத்தை பெற்றுதருவதாகவும் சிறிசேன தெரிவித்தார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதாகவும், இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை தீயநோக்கம் கொண்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிக்கு எதிர்காலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராவதற்கு வாய்ப்பு கிடைத்தால் அவர் உண்மையை தெளிவுபடுத்துவார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.