போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!

ஹெரோயின் போதை வர்த்தகம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள டைல் சமிந்தவுக்கு உதவியாக போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த காவல்துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய குறித்த பெண் சந்தேகநபரை இந்த மாதம் 25 ஆம் திகதி வரையில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த மினுவாங்கொட பதில் நீதவான் நயனா புஞ்சிஹேவா நேற்று அனுமதியளித்துள்ளார்.

மினுவாங்கொட நகரில் தொலைபேசி நிலையமொன்றை நடத்தி சென்ற 46 வயதான குறித்த பெண் டைல் சமிந்த கைது செய்யப்பட்டதன் பின்னர் காணாமல் போயிருந்தார்.

அவர் ஈஸி கேஸ் முறையில் ஹெரோயின் வியாபாரத்தை முன்னெடுத்திருந்தமை பின்னர் தெரியவந்திருந்தது.

இந்தநிலையில் அவர் மினுவாங்கொடை பகுதியில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.