
பண மோசடி செய்தவர் மடக்கிப்பிடிப்பு
மட்டக்களப்பு - கல்குடாப்பகுதியில் சமூக வலையமைப்பு ஊடாக பண மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விதானகே தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
வட்ஸ்அப் வலையமைப்பினூடாக பண மோசடியில் ஈடுபட்டு வந்த வறக்காபொல - கொரகொல்ல பிரதேசத்தினை சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலானய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபரை தந்திரமான முறையில் பாசிக்குடா பிரதேசத்திற்கு வரவழைத்து கல்குடா பொலிஸாரின் உதவியுடன் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது அவரை மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.