கார்களை திருடி விற்பனை செய்யும் கும்பல்! முற்றுகையிட்ட பொலிஸார்

கார்களை திருடி விற்பனை செய்யும் கும்பல்! முற்றுகையிட்ட பொலிஸார்

கொழும்பில் திருடப்பட்டு மட்டக்களப்பில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த காரொன்றை வாழைச்சேனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த செயலுடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கொழும்பு - கடவத்தை பகுதியில் திருடப்பட்ட காரொன்று ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள வியாபார நிலையம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த காரை கைப்பற்றியுள்ளது.

சந்தேக நபர் பல வாகனங்களை திருடி விற்பனை செய்துள்ளதாகவும் குறித்த சந்தேக நபருடன் இன்னும் பலர் தொடர்புபட்டிருப்பதாகவும், ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.