
ஒரே குடும்பத்தில் "தாய், தந்தை, பச்சிளம் குழந்தை" பரிதாபமாக பலி!
சீரற்ற காலநிலையால் இன்று கண்டியில் இடம்பெற்ற அனர்த்தத்தில் ஒன்றரை மாத பச்சிளம் குழந்தை உட்பட அக்குழந்தையின் தாய், தந்தை ஆகியோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
முதலாம் இணைப்பு
கண்டி - பூவெலிகட பகுதியில் ஐந்து மாடிக்கட்டிடம் ஒன்று பாறி விழுந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை குறித்த 5 மாடிக்கட்டிடம் தாழிறிங்கி அருகில் உள்ள வீடொன்றின் மீது விழுந்துள்ளது.
இந்த அனர்த்தத்தில் 5 பேர் சிக்கியிருந்த நிலையில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதுடன் - இதுவரை 2 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 2 பேரை காணவில்லை. இதனால் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.