பதுளை மாவட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டம் குறித்து மகிழ்ச்சியான தகவல்!

பதுளை மாவட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டம் குறித்து மகிழ்ச்சியான தகவல்!

பதுளை மாவட்டத்தில் அபாய வலயப் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு மாடி வீட்டுத்திட்டத்தினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தொழிற்துறை அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 339 குடும்பங்களுக்கு காணி உறுதிகளும், வீடுகளை நிர்மானித்துக் கொள்வதற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வும் பதுளை அரச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.