மஞ்சள் உற்பத்தி தன்னிறைவு பெறும்: விவசாயத் திணைக்களம் அறிவிப்பு!

மஞ்சள் உற்பத்தி தன்னிறைவு பெறும்: விவசாயத் திணைக்களம் அறிவிப்பு!

அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாடு மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயத் திணைக்களம் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், உள்நாட்டு தேவைகளுக்காக ஆண்டுக்கு 5 ஆயிரத்து 300 மெட்ரிக் டொன் அளவிலான மஞ்சள் வௌிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக, விவசாயத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நாட்டில் 10 வகையான மசாலா பொருட்கள் இறக்குமதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் மஞ்சள் உற்பத்தியில் ஆர்வம் காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.