
புத்தளத்தில் லொறியை மோதிய புகையிரதம்! ஒருவர் படுகாயம்
புத்தளம் - ரத்மல்யாய பிரதேசத்தில் பட்டா ரக லொறியொன்றுடன் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து இன்று (20) காலை இடம்பெற்றுள்ளதுடன், பாலாவி ஹிஜ்ரத்புரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் ரதமல்யாய பள்ளிவாசலுக்குச் செல்லும் குறுக்கு வீதியில், ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது பட்டா ரக லொறியின் இயந்திரப் பகுதி செயழிலந்து ரயில் கடவையிலேயே நின்றுள்ளது.
இதன்போது புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பரிசோதனை ரயில் ஒன்று குறித்த லொறி மீது மோதியுள்ளது.
இவ்விபத்தில் குறித்த லொறி பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், லொறியின் சாரதி காயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.