புத்தளத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

புத்தளத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

புத்தளம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்றைய தினம் கண்காணிப்பு விஜமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்படி, மதுரங்குளி மற்றும் வாழைச்சேனை தோட்டங்களின் செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டுள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் 900 ஏக்கர் பரப்பளவில் தேங்காய், காய்கறிகள் உள்ளிட்ட பல பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

அத்துடன்,  10 ஏக்கர் நிலத்தில் வெற்றிகரமாக மாதிரி திராட்சைப் பயிர்ச் செய்கையை மேற்கொண்டமைக்கு ஜனாதிபதி பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இத்தாலி அரசாங்கத்தினால் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கிடைக்கப் பெற்ற நிதியுதவியின் ஊடாக, புத்தளத்தில் நிர்மாணிக்கப்பட்ட விவசாய தொழிநுட்ப நிறுவனத்தையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது திறந்துவைத்துள்ளார்.

இதன்படி, குறித்த நிறுவனத்தில் 50 மாணவர்களுக்கு தங்குமிட வசதிகளுடன் கூடிய பயிற்சிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த நிறுவனத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.