வெலிகடை சிறைக்குள் திடீர் சோதனை- கையடக்க தொலைபேசி உள்ளிட்ட 7 சிம் அட்டைகள் மீட்பு

வெலிகடை சிறைக்குள் திடீர் சோதனை- கையடக்க தொலைபேசி உள்ளிட்ட 7 சிம் அட்டைகள் மீட்பு

வெலிகடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது கைதிகளிடம் இருந்த 7 சிம் அட்டைகள் மற்றும் ஒரு கைப்பேசியை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இவற்றில் களுத்துறை சிறைச்சாலையில் இருந்து அழைத்துவரப்பட்ட கைதி ஒருவரை சோதனைக்கு உட்படுத்தும் போது அவரது பொதியினுள் இருந்த காலணியில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 5 சிம் அட்டைகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

மற்றொரு கைதியின் ஆடைக்குள் சிம் அட்டையொன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததோடு, அவரது சீருடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்க தொலைபேசியையும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் இவ்வாறு கைப்பற்றியுள்ளனர்.