விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர் உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர் உயிரிழப்பு

கெப்பிற்றிகொல்லாவா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர், சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி  அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (சனிக்கிழமை), கெப்பிற்றிகொல்லாவை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த இராணுவ வீரரை, இலகு ரக வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து  இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் கெப்பிற்றிகொல்லாவ பகுதியை சேர்ந்த அமரசேன (வயது28) என்ற இராணுவ வீரரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெப்பிற்றிகொல்லாவா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.