பறக்கமுடியாமல் பரிதவித்த பருந்தை பாதுகாப்பாக மீட்ட வனவிலங்கு அதிகாரிகள்

பறக்கமுடியாமல் பரிதவித்த பருந்தை பாதுகாப்பாக மீட்ட வனவிலங்கு அதிகாரிகள்

காயத்திற்கு உள்ளானதன் காரணமாக கீழே விழுந்த பருந்து ஒன்றை வனவிலங்கு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

கல்கிரியாகம-மானேருவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் வழங்கிய தகவலுக்கு அமைவாக குறித்த பருந்தை வனவிலங்கு அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இதன் போது பருந்தின் சிறகுகள் காயமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இதற்கு சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.