கண்டியில் மண்ணுக்குள் புதையுண்ட 5 மாடி கட்டிடம்

கண்டியில் மண்ணுக்குள் புதையுண்ட 5 மாடி கட்டிடம்

கண்டி-புவெலிகட பகுதியில் உள்ள ஐந்து மாடி கட்டிடமொன்று மண் தாழிறக்கத்தால் முற்றாக மண்ணால் புதையுண்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த கட்டிடத்திற்குள் சிக்கியுள்ள குழந்தை உள்ளிட்ட மூன்று பேரை மீட்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.