தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செய்தி

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செய்தி

ஜனநாயக ரீதியிலான நாட்டிற்கு அனைத்து தேர்தல்களும் அவசியமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் உறுப்பினர்கள் இன்றி இயங்குகின்றன.

2 வருடங்களுக்கு மேலாக உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெறாது இருந்தது.

ஆகவே தேர்தல் இல்லாது செயற்பட முடியுமானால், ஏன் தேர்தல் ஒன்றை நடத்தி செலவீனத்தை ஏற்படுத்துகிறார்கள் என சிலர் கேள்வி எழுப்பு கின்றனர்.

மக்களின் தேவைகளை மக்கள் பிரதிநிதிகளின் ஊடாகவே வெளிப்படுத்தி அதனை அடைய முடியும்.

அதுவே ஜனநாயகமாக கருதப்படும் ஆகவே இந்த நாட்டிற்கு அனைத்து தேர்தல்களும் அவசியமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.