தேசிய உற்பத்திப் பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கும் அரசாங்கம்

தேசிய உற்பத்திப் பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கும் அரசாங்கம்

பாரம்பரிய கிராமிய கைத்தொழில்களை அதனது சம்பிரதாயங்களை பாதுகாத்து நவீன தொழிநுட்பங்களை உட்புகுத்தி தேசிய மற்றும் சர்வதேச சந்தைக்கும் ஏற்ற வகையில் தயாரித்து விநியோகிப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், மரப்பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

சவால்களை முறியடித்து எட்ட வேண்டிய இலக்குகளை அடைவதே பிரதான நோக்கமாகும்.

எமக்கே உரித்தான உற்பத்திப்பொருட்களுக்கு பெறுமானத்தை வழங்கி உரிய தொழிலில் ஈடுபடும் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து அவர்களது தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன் மூலம் நாட்டின் அபிவிருத்தியை அடைய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.