ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு பெருமளவான மேன்முறையீடுகள் பதிவு
அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இதுவரை 6,952 மேன்முறையீடுகள் கிடைத்துள்ளன.
அதில் 2,365 முறைப்பாடுகள் ஆணைக்குழுவுக்கு நேரடியாக கிடைத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
2015 முதல் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரச சேவையில் இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராய பிரதமர் ஆணைக்குழு ஒன்றை நியமித்திருந்தார்.
அந்த ஆணைக்குழுவின் முதற்கட்ட அறிக்கை அண்மையில் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று (18) அலரி மாளிகையில் அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஆணைக்குழு பிரதமருடன் கலந்துரையாடியது.
இந்த குழுவின் தலைவராக இதுவரை மஹிந்த யாப்பா அபேவர்தன செயற்பட்ட நிலையில் அவர் சபாநாயகராக தெரிவாகியுள்ளதால் அவருக்கு பதிலாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே நியமிக்கப்பட்டுள்ளார்