விசேட சோதனை நடவடிக்கை! பலர் கைது
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளினால் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது 12 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, விற்பனைக்கு பொறுத்தமற்ற பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா,கனேமுல்ல,கிரிந்திவிட்ட,பெம்முல்ல,அமுனுகொட மற்றும் வெலிவேரிய ஆகிய பகுதிகளிலே இவ்வாறு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.