நாடாளுமன்றில் எம்.பி. ஒருவரின் முகம் சுழிக்கும் செயல் - வைரலாகும் புகைப்படங்கள்
தாய்லாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றினுள் ஆபாசப் படம் பார்த்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் வினவியபோது, அவர் படம் பார்த்ததை ஒப்புக் கொண்டார். ஆனால் தான் ஏன் அதை பார்த்தேன் என ஒரு விளக்கமும் கொடுத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தின் போது வரவுசெலவுத் திட்ட உரை வாசிக்கப்பட்டது.
இதன்போது ரொன்னாதேப் அனுவத் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் தன்னுடைய திறன்பேசியில் ஏதோ பார்த்தபடி இருந்துள்ளார். அவரை உற்று நோக்கிய போது, அவர் ஆபாச படம் பார்ப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இது நாடாளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட விடயம் என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று சபாநாயகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.