தொடரும் அபாய நிலை - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தொடரும் அபாய நிலை - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ஸ்ரீலங்காவில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதால் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி சூரியக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

தாழமுக்க வலயம் உருவாகும் சாத்தியம் காணப்படுவதால் எச்சரிக்கப்பட்ட பகுதிகளில் மீனவர்கள் மற்றும் கடல்சார் தொழிலாளர்களை அவதானமாக செயற்படுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய காலநிலை தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மழையினால் நீரோடைகள், ஆறுகள் பெருக்கெடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்தும் காணப்படுகின்றது.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெதண்டி தோட்டம் புரோடப் பிரிவில் தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

அடிக்கடி மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதனால் இப்பகுதியில் வாழும் குடியிருப்பாளர்களை அவதானத்துடன் இருக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.