எந்திரத்தின் உதவியுடன் தென்னை மரத்தில் ஏறிய இராஜாங்க அமைச்சர்

எந்திரத்தின் உதவியுடன் தென்னை மரத்தில் ஏறிய இராஜாங்க அமைச்சர்

வறகாபொலவில் வசிக்கும் நபர் தயாரித்த எந்திரத்தின் உதவியுடன் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தோட்டத்தில் ஒரு தென்னை மரத்தில் ஏறினார்.

அடுத்த சில நாட்களில் இதை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்

இதன்போது இலங்கையில் தேங்காய் விலை உயர்வு குறித்தும் தனது கருத்துக்களை தெரிவித்தார்.

மேலும் தேங்காய், கிதுல், பனை, றப்பர் போன்றவற்றுடன் தொடர்புடைய தொழில்துறை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளார்.

உலக சந்தையில் தேங்காய் அடிப்படையிலான பொருட்களுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக இலங்கையில் தேங்காய் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதே நேரத்தில், தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபாய் என்றும், தேங்காய் பறிப்பவருக்கு 100 ரூபாய் என்றும் காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.

அத்துடன் இவர் மரத்தில் ஏறி தேங்காயும் பறித்துள்ளார்.

இதேவேளை இந்த நாட்களில் தேங்காய் பறிப்பவர்களைக் கண்டுபிடிப்பதும் கடினம் என்று அவர் கூறினார்.

இருப்பினும், தேங்காய் விலை அதிகரித்த போதிலும், தேங்காய்களை இறக்குமதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது,

அடுத்த சில நாட்களில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சலுகை விலையில் தேங்காய்களை வழங்குவதற்கான திட்டம் தயாரிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்தார்.