அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை : கமல் குணரட்ன!

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை : கமல் குணரட்ன!

அரச நிறுவனங்களில் மோசடியில் ஈடுபட்ட  அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து  கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரச நிறுவனங்களில் மோசடியில் ஈடுபட்ட   அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்  நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவும் எதிர்கால சந்ததியினரின்  பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவும்   பணியாற்றும் அனைத்து தரப்பினரும்  மகிழ்ச்சியுடன் செயற்பட வேண்டும்.

காணி அபகரிப்பு விடயம்  தொடர்பில் விசாரணை முன்னெடுப்பதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்   விசேட பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பிலும் காணப்படும்  பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் இரண்டு நிறுவனங்களின்  பணிபுரியும் பணியாளர்கள் இருவர் வீடு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பணியாளர்கள் 20 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  எனவே  நாட்டில் சட்டம் முறையாக அமுல்படுத்தப்படும் என்பதை  நான் இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.