ஏழு நாட்கள் அவகாசம்! விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
20ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்வதானால் அதற்காக ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் 22 ஆம் திகதி ஆணைப் பத்திரத்தில் சேர்க்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அது தொடர்பான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் நாடாளுமன்ற துணைப் பொதுச்செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த வரைவுக்கு எதிராக நீதிமன்றத்திற்குச் செல்வதானால், அதற்காக 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்றத்திற்குச் சென்று மனுத் தாக்கல் செய்தால், நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவுபெறுவதற்கு மூன்று வாரங்கள் எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை இரண்டாவது வாசிப்பு விவாதத்திற்குப் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
வரைவில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அவற்றைக் குழு கூட்டத்தில் கலந்துரையாடப்படும் போது சேர்க்கலாம் என்றும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.