இலங்கையில் தங்கியிருந்த 154 பேர் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பு!

இலங்கையில் தங்கியிருந்த 154 பேர் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பு!

கொரோனா வைரஸ்   காரணமாக இலங்கையில் தங்கியிருந்த ஒரு குழந்தை உட்பட 154 இந்தியர்கள் இலங்கையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இவர்கள் நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் இருந்து பெங்களூர் மற்றும் புதுடெல்லிக்கு சிறப்பு ஏர் இந்தியா விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவினால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியப் பொதுமக்களை திருப்பி அழைப்பதற்காக உலகெங்கிலும் இருந்து இந்தியாவுக்கு அழைத்துக்கொள்வதற்கான இந்திய அரசாங்கத்தின் ‘வந்தே பாரத் மிஷன்’ ஒரு பகுதியாக இந்த விமானம் இன்று இந்தியர்களை இலங்கையில் இருந்து அழைத்துச் சென்றது.

வந்தே பாரத் மிஷனின் பல்வேறு முறைகள் மூலம் இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் நாட்டுக்கு திருப்பி  அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்தியாவுக்கு திரும்புவதற்காக இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இதுவரை பதிவு செய்யாத இலங்கையில் உள்ள இந்தியர்கள் இந்திய உயர்ஸ்தானிகரத்தின் இணையத்தின் ஊடாக பதிவுகளை செய்துக்கொள்ளமுடியும் என்றும்  அறிவித்துள்ளது.