11 வயது சிறுமியின் உயிரை பறித்த கோர விபத்து...!

11 வயது சிறுமியின் உயிரை பறித்த கோர விபத்து...!

ராகல-வலப்பன்னை பிரதான வீதியின் 70 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து நேற்று இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நடந்து சென்ற சிறுமி மீது பாரவூர்தி ஒன்று மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.