உங்கள் நாக்கை அடக்குங்கள்! ட்ரம்புக்கு கிம் ஜோங் பகிரங்க எச்சரிக்கை

உங்கள் நாக்கை அடக்குங்கள்! ட்ரம்புக்கு கிம் ஜோங் பகிரங்க எச்சரிக்கை

வடகொரியாவின் விஷயத்தில் அமெரிக்கா தேவையில்லாமல் தலையிட்டால் அமெரிக்காவில் அதிபர் தேர்தலே நடக்காது, பெரிய பிரச்சினை வரும் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கொரியா அமெரிக்காவுடன் சேர்ந்து வடகொரியாவை எதிர்த்து வருகிறது என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக வடகொரியா மற்றும் தென் கொரியா உறவு மொத்தமாக துண்டிக்கப்பட்டு உள்ளது. முதற் கட்டமாக தென்கொரியாவுடன் போக்குவரத்து மற்றும் தொலைபேசி தொடர்பை வடகொரியா துண்டித்து உள்ளது. இந்த சண்டையில் தென் கொரியாவிற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது.

தென் கொரியாவும் அமெரிக்காவும் நட்பு நாடுகள். அதேபோல் வடகொரியாவும் சீனாவும் மிகவும் நெருக்கமான நட்பு நாடுகள். இதனால் வடகொரியாவை அழிக்கும் வகையில் தென் கொரியாவுடன் அமெரிக்கா மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறது. இது வடகொரியாவை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

இந்த நிலையில் வடகொரியாவின் விஷயத்தில் அமெரிக்கா தேவையில்லாமல் தலையிட்டால் அமெரிக்காவில் அதிபர் தேர்தலே நடக்காது, பெரிய பிரச்சனை வரும் என்று வடகொரியா தெரிவித்து இருக்கிறது.

அந்நாட்டு அரசு சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், எங்கள் நாட்டு விஷயத்தில் அமெரிக்கா தலையிட கூடாது. நீங்கள் எங்கள் பிரச்சனையில் மூக்கை நுழைக்க கூடாது. நீங்கள் தவறு செய்கிறீர்கள்.

எங்கள் பிரச்சனையில் தலையிடும் முன் உங்கள் நாட்டின் பிரச்னையை கவனியுங்கள். உங்கள் உள்நாட்டில் அவ்வளவு பிரச்சனை இருக்கிறது. நீங்கள் மோசமான சூழ்நிலையில் இருக்கிறீர்கள்.

இப்படிப்பட்ட நிலையில் நீங்கள் எங்களிடம் மோதினால் உங்களின் அமைதிதான் கெடும். உங்கள் நாட்டில் அதிபர் தேர்தல் நடக்க வேண்டும் என்றால் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.

உங்கள் நாக்கை வைத்துக் கொண்டு சும்மா இருங்கள். உங்களுக்கு பிரச்சினை வேண்டும் என்றால் எங்களிடம் மோதுங்கள் , இல்லையெனில் வடகொரியா குறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருங்கள்.

இது உங்களுக்கு மட்டும் அல்ல, உங்கள் நாட்டு மக்களுக்கும் இதுதான் சரியான விஷயமாக இருக்கும் என்று பகிரங்கமாக வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.