தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 224 பேர் வெளியேறினர்!

தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 224 பேர் வெளியேறினர்!

தனிமைப்படுத்தல் நிலையங்களில், தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த மேலும் 224 பேர் இன்று(புதன்கிழமை) வெளியேறியுள்ளனர்.

பூசா தனிமைப்படுத்தல் நிலையம், இராஜகிரிய தனிமைப்படுத்தல் நிலையம், பியகம தனிமைப்படுத்தல் நிலையம், புனாணை தனிமைப்படுத்தல் நிலையம், பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையம், அனுராதபுரம் மற்றும் சிகிரியாவில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தே இவ்வாறு தனது தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 224 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 41,192 பேர் இதுவரையில் வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 6,255 பேர் முப்படையினரால் பராமரிக்கப்படும் 59 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.