நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும், நாளையும் இடம்பெறவுள்ள தேர்தல் ஒத்திகை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும், நாளையும் இடம்பெறவுள்ள தேர்தல் ஒத்திகை

நுவரெலியா, மாத்தளை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும், நாளையும் தேர்தல் ஒத்திகை இடம்பெறவுள்ளது.
 
சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய வாக்களிப்பை நடத்துவது குறித்து விளக்கமளிப்பதற்காக இந்த தேர்தல் ஒத்திகை இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
இதற்கமைய, நுவரெலியா, மாத்தளை, கம்பஹா, புத்தளம், மாத்தறை, களுத்துறை, லுணகம்வேஹேர உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் ஒத்திகை இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 
இதேவேளை, யாழ்ப்பாணம், மாத்தறை மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அரசாங்க அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில், நாளை அல்லது நாளை மறுதினம் அவற்றை மாவட்ட தேர்தல்கள் ஆணையாளர்களிடம் கையளிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு அச்சிடப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ள அநுராதபுரம், பொலனறுவை மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் இன்றைய தினம் அந்த மாவட்டங்களின் சிரேஷ்ட தேர்தல்கள் ஆணையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.