இலங்கைக்கு 100 மில். டொலர் கடன் - அளிக்க முன்வந்தது இந்தியா

இலங்கைக்கு 100 மில். டொலர் கடன் - அளிக்க முன்வந்தது இந்தியா

இலங்கையில் சூரிய மின் சக்தி திட்டத்தை செயல்படுத்த 100 மில்லியன் டொலர் கடன் வசதியை வழங்க இந்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்த நிதி ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி) மூலம் வழங்கப்படும். அரசு கட்டடங்களின் கூரைகளில் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவுவதற்கும், திருகோணமலை, மொனராகலை, அனுராதபுரா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சூரிய மின்சக்தி திட்டங்களை வழங்குவதற்குமான திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டது.