பொது மக்களுக்கு அனுமதி கிடையாது - ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு
பாரம்பரிய மற்றும் சமய கிரியைகளுக்கு முன்னுரிமையளித்து முக்கிய புண்ணியஸ்தலங்களிலும் தேவாலயங்களிலும் இம்முறை பெரஹராக்களை ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
எனினும் இம்முறை எந்த ஒரு புண்ணிய ஸ்தலத்தில் இருந்தும் பெரஹெராவில் பங்குபற்றுவதற்கும் பார்வையிடுவதற்கும் பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூர், திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் இருந்து பாத யாத்திரையாக கதிர்காமத்திற்கு பெரஹெராவுக்கு வருகை தருவோருக்கும் இம்முறை அனுமதியில்லை என குறிப்பிட்டுள்ளார்.
வருடாந்த பெரஹரக்களை இம்முறை ஏற்பாடு செய்ய வேண்டிய முறை பற்றி கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பங்குபற்றுதலுடன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
அனைத்து பெரஹெராக்களையும் குறைந்தளவான கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் சுகாதார பரிந்துரைகளை பின்பற்றி மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பல்வேறு பிரதேசங்களில் இருந்து பெரஹெராவில் பங்குபற்றும் கலைஞர்கள் குறித்த பிரதேசத்தின் சுகாதார அதிகாரிகளின் அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.