வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி..!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி..!

மேல்,சப்ரகமுவ மத்தயி மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

நாட்டை சூழவுள்ள கடல் பிராந்தியங்களில், அலையின் சீற்றம் இடைக்கிடையே அதிகரிக்கக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களிலும், மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இதேநேரம், புத்தளம் முதல் கொழும்பு ஊடாக காலி, ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில், அலையானது இரண்டரை முதல் 3 மீற்றர் அளவில் மேலெழுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில், மீனவர்களும், கடற்பயணிகளும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.