அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!
அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவை அண்மித்த பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கி இலங்கைத் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நேற்றுமுன்தினம் தனது நண்பர்களுடன் குறித்த ஆற்றுக்குச் சென்ற இவ்விளைஞர் நீச்சலில் ஈடுபட்டபோது காணாமல் போயுள்ளார்.
இவரைத் தேடும்பணி வெள்ளி முதல் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இளைஞரின் சடலம் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டது.
மெல்பேர்னில் கல்வி கற்று வரும் இலங்கையைச் சேர்ந்த (21 வயது) தமிழ் இளைஞரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.