தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை நடவடிக்கைகள்..!

தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை நடவடிக்கைகள்..!

இரண்டு தடவைகள் தீப்பரவலுக்கு உள்ளான எம்.ரி நிவ் டயமன்ட் கப்பலின் தலைவர் உட்பட பணிக்குழாமினரிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பணிகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்றைய தினம் காலிக்கு சென்றிருந்தனர்.

குறித்த கப்பல் விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, அதன் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

இரண்டு தடவைகள் தீ ப்பிற்றிய எம்.டி.நிவ் டயமன்ட் கப்பல் கரையிலிருந்து 56 கடல் மைல் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, பரிசோதனைகளுக்காக நிவ் டயமன்ட் கப்பலிலுள்ள எண்ணெய் மாதிரியை பெற்றுக் கொள்ளுமாறு கடற் பாதுகாப்பு அதிகார சபைக்கு நேற்று முன்தினம் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதற்கமைவான பணிகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.