கோட்டாபய தலைமையில் நடந்த விசேட கலந்துரையாடல் -பாடசாலை எண்ணிக்கையில் வருகிறது மாற்றம்

கோட்டாபய தலைமையில் நடந்த விசேட கலந்துரையாடல் -பாடசாலை எண்ணிக்கையில் வருகிறது மாற்றம்

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பாடசாலைகளுக்கும் சமமான வசதிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கல்விக் காரியாலயங்கள் மற்றும் வலய காரியாலயங்களுக்கிடையிலான தொடர்பை பலப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

குறித்த விடயம் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.

பாடசாலைகளை நவீனமயப்படுத்துவதற்காக மாவட்ட கல்விக் குழுக்களை அமைக்கவும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.