நிபந்தனைகளால் வாய்ப்பிழக்கும் பட்டதாரிகள்!

நிபந்தனைகளால் வாய்ப்பிழக்கும் பட்டதாரிகள்!

தொழிற்பயிற்சிக்காக பட்டதாரிகளை இணைக்கும் திட்டத்தின் கீழ் மேன்முறையீடு செய்வதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளமையினால் சுமார் 10902 பேர் மேன்முறையீடு செய்யும் வாய்ப்பை இழந்துள்ளார்கள் என்று பட்டதாரிகள் தேசிய மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.31.12.2019ம் அன்று பட்டப்படிப்பை பூர்த்தி செய்த அனைவரும் பயிலுநர்களாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று அரசாங்கம் உறுதியளித்திருந்தபோதும் செப்டெம்பர் 2ம் திகதி பயிலுநர் பட்டதாரிகளாக இணைத்துக்கொள்ளும் போது பெரும் எண்ணிக்கையானவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் அழைப்பாளர் சந்தன சூரியராய்சச்சி தெரிவித்துள்ளார்.அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் இம்மாதம் 15ம் திகதிக்கு முன்பாக மேன்முறையீடு செய்யுமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும் மேன்முறையீடு செய்வதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. அதனால் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் மேன்முறையீட்டு வாய்ப்பை இழந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..

மேன்முறையீட்டு சட்டதிட்டங்களுக்கு அமைவாக முதன்முறை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது கிராமசேவையாளர் கையொப்பம் தொடர்பான பிரச்சினைக்கு முகங்கொடுத்த 655 பேருக்கு முதன்முறை விண்ணப்பங்களை கையளிக்கும் போது பட்டதாரி சான்றிதழின் பிரதியற்ற 2016 பேர் மற்றும் சிறு தொழில்களை செய்தவண்ணம் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த 3,690 பேருக்கும் தனியார் பிரிவில் ஊழியர் சேமலாப நிதிய பங்களிப்பை வழங்கும் 5,854 பட்டதாரிகள், பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி பெற்ற வௌிநாட்டு பல்கலைகழகங்களில் பட்டம்பெற்ற 3.745 பேர் மற்றும் 45 வயது பூர்த்தியடைந்த 502 பேரும் மேன்முறையீடு செய்ய முடியாது போயுள்ளது என்றும் சந்தன சூரியராய்ச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.