
கொழும்பின் பல பகுதிகளில் இன்றிரவு 10 மணிமுதல் நீர்வெட்டு
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் பல பாகங்களில் இன்றிரவு 10 மணிமுதல் 12 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொழும்பு 09, 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில், இன்றிரவு 10 மணி முதல் நாளை முற்பகல் 10 மணி வரையில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முக அழகை இரட்டிப்பாக்கும் பழைய தயிர்- பயன்படுத்துவது எப்படி..
08 February 2025
இரவு தூங்கும் முன்பு வாழைப்பழம் சாப்பிடலாமா? ஆய்வில் வெளியான தகவல்
06 February 2025