கத்தி முனையில் தங்கம் அபகரிப்பு! ஆரையம்பதியில் சம்பவம்
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பகுதியில் கத்தி முனையில் தங்கம் அபகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 4 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருகையில்,
ஆரையம்பதியிலுள்ள வீட்டில் பெண்ணொருவர் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அவ்வேளை வீட்டினுள் நுழைந்த திருடன் குறித்த பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து தாலியை பறித்த போது அப்பெண் கூச்சலிடவே திருடன் தப்பியோடிள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 11 பவுண் எடையுள்ள தாலியின் பெறுமதி 11 இலட்சத்திற்கும் அதிகமென வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.