கஞ்சா விதைகளுடன் இருவர் கைது...!
நாவலப்பிட்டிய பகுதியில் கஞ்சா ரக போதைபொருள் மரங்களை நடுகை செய்த இரண்டு பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு மரங்களில் இருந்து பெறப்பட்ட கஞ்சா இலைகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.