
தேசிய பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட வேண்டும்-கமல் குணரத்ன
தேசிய பாதுகாப்பு உறுதிபடுத்தப்படாமல் எந்தவொரு நாட்டினையும் முன்னேற்ற முடியாதென பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் நாடு காணப்பட்ட விதம் தொடருமாயின் எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் இலங்கை சோமாலியாவை போன்று ஆகிவிடும்.
நாட்டின் பல பகுதிகளில் தற்போது சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் என்பன கைப்பற்றப்படுகின்றன.
இதனை பாதுகாப்பு தரப்பினர் மாத்திரமின்றி நாட்டு மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் மக்கள் அச்சத்துடன் வாழக்கூடிய நிலை காணப்பட்டது.
பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்ற போதை பொருளை முற்றாக கட்டுபடுத்துமாறு மக்கள் முறையிட்டுள்ளனர்.
கண்டி போகம்பர சிறைச்சாலையை பார்வையிடவுள்ளதோடு அதனை மீள உருவாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்.
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தமக்கு அறிவித்துள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.