வன்னி மக்களுக்கு விரைவில் கிடைக்கவுள்ள தீர்வு!

வன்னி மக்களுக்கு விரைவில் கிடைக்கவுள்ள தீர்வு!

புதிய வீட்டுத்திட்டம் மற்றும் நிலுவையில் உள்ள வீட்டுத்திட்டத்திற்கான கொடுப்பனவுகளை விரைவாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் வீடமைப்புத்திட்ட இராஜாங்க அமைச்சர், இந்திக்க அனுருத்தவுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போதே இவ்விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

வீட்டுத்திட்டம் தொடர்பாக வன்னி பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் விடயங்கள் முழுமையாக சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் சாதகமாக இதன் முடிவுகள் அமைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.