உள்ளக வீதிகளில் பாரவூர்திகள் செல்வதற்கு தடை

உள்ளக வீதிகளில் பாரவூர்திகள் செல்வதற்கு தடை

பனிக்கன்குளம் உள்ளக வீதிகளில் வியாபார நோக்கத்தோடு பாரவூர்திகள் செல்வதற்கு தடைவிதித்து புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு - பனிக்கன்குளம் கிராமத்தில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் தொடர்ச்சியான மணல் அகழ்வு காரணமாக பனிக்கன்குளம் கிராமத்தில் உள்ளக வீதிகளில் பாரவூர்திகள் பயணிப்பதால் வீதிகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்திற்கொண்டு உள்ளக வீதிகளில் வாகனங்கள் செல்வதை தடை செய்து தருமாறு புதுக்குடியிருப்பு பிரதேச சபையிடம் கிராம பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபை அமர்வின் போது மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.