கல்வி கற்கச் சென்ற மாணவனை சீரழித்த உதவி அதிபர் ! பேரம் பேசிய மனைவி

கல்வி கற்கச் சென்ற மாணவனை சீரழித்த உதவி அதிபர் ! பேரம் பேசிய மனைவி

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் உதவி அதிபரால் 15 வயது சிறுவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடியிருப்பாளரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து சந்தேகநபரை பானந்துறை - தென் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.ஏ) தெரிவித்துள்ளது

குறித்த உதவி அதிபரின் இல்லத்திற்கு அருகில் வசிக்கும் மாணவன் சிங்கள பாடத்தில் பலவீனமாக இருந்த காரணமாக இவரிடம் மேலதிக வகுப்புக்குச் சென்றுள்ளார்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் உதவி அதிபரின் இல்லத்தில் தனியாக கல்வி கற்று வந்துள்ளார்.

இதன்போது ஜூலை மாதம் பல சந்தர்ப்பங்களில் அந்த நபரால் குறித்த சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து குறித்த சிறுவன் ஆகஸ்ட் மாதத்தில் வகுப்புகளில் கலந்து கொள்ள மறுத்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து அவரது பெற்றோர் விசாரித்ததில் துணை அதிபரின் செயல் வெளிவந்துள்ளது.

மேலும் தாயார் தனது சகோதரருடன் உதவி அதிபரின் இல்லத்திற்கு வந்து அந்த நபரை மர கம்பத்தால் தாக்கியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த சந்தேகநபரின் மனைவி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை வீட்டிற்குள் அழைத்துச் சென்று 100,000 தருவதாகவும், இந்த விஷயத்தை மறைத்து வைக்குமாறும் பேரம் பேசியுள்ளார்.

எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் பானந்துறை பொலிஸாரால் நீதிமன்ற்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனர்.