அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை..!

அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை..!

இலங்கை மருத்துவ சபையின் சுயாதீன தன்மையை பாதுகாப்பதற்கு நடவடிகை மேற்கொள்ளாவிட்டால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் அறிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் நிறைவேற்று சபை கூட்டம் நேற்று இடம்பெற்றதோடு இதன்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத.

அத்துடன் அவசரமாக மத்திய செயற்குழு கூட்டத்தையும் கூட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சபையின் தரவியல்பு தன்மை, மற்றும் மருத்துவ கல்வியின் தரம் ஆகிவற்றை பாதுகாப்பதற்கு இலங்கை மருத்துவ சபையே காணப்படுகின்றது.

கடந்த 90 வருடங்கள் சுயாதீனதன்மையும் இயங்கி வந்துள்ள மருத்துவ சபையை அரசியல் மயமாக்குவதற்கும் மோசடி செய்வதற்கும் காரணமான அமைச்சர் ராஜித்த சேனாரத்வே என அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் அறிவித்துள்ளது.