ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ போராட்டத்தில் இணைய தயார்..!
கோரிக்கை முன்வைக்கப்படுமானால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ போராட்டத்தில் தாமும் இணைந்து கொள்வதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றைய தினம் சாட்சியமளிததன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தலைமைத்துவம் தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டால், அது குறித்து கவனம் செலுத்துவதற்கு தயார் என்றும் மங்கள சமரவீர கூறியுள்ளார்.