போதைப்பொருள் விவகாரம்: இராணுவ வீரர்களுக்கும் அதிகபட்ச தண்டனை நிச்சயம்– இராணுவத்தளபதி

போதைப்பொருள் விவகாரம்: இராணுவ வீரர்களுக்கும் அதிகபட்ச தண்டனை நிச்சயம்– இராணுவத்தளபதி

போதைப்பொருள் விவகாரங்களில் இராணுவத்திலுள்ள சில வீரர்களும் தொடர்புப்பட்டிருந்தால், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை நிச்சயம் வழங்கப்படுமென இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக சவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “இராணுவத்தில் இருக்கின்றவர்கள் யார்? வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து சேவை புரிகின்றவர்கள் அல்ல.

நாடு முழுவதில் இருக்கின்ற சாதாரண குடிமக்கள்தான் இராணுவ வீரர்களாக இருக்கின்றனர். அவர்கள் இராணுவ சீருடையை அணிந்திருந்தாலும் நாட்டிலுள்ள பிரஜைகளில் ஒருவர்தான்.

இதற்கிடையில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் இராணுவத்திலும் இருப்பதாக குற்றச்சாட்டு ஒன்று தொடர்ந்து முன்வைக்கப்பட்டு, வருகின்றது.

எனினும், இராணுவ சேவையில் ஒருபோதும் இத்தனைய விடயங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அத்துடன் இத்தகைய செயற்பாகள் இடம்பெறாது.

ஆனால் விடுமுறைகளுக்காக வீடுகளுக்கு செல்லும் வீரர்கள் அல்லது ஏதோவொரு சந்தர்ப்பத்தில் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டதாக நிருபிக்கப்பட்டால், அதிகபட்ச தண்டனை நிச்சயம் வழங்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.