மஹிந்த முன்வைத்த மாடறுப்பு யோசனை திடீரென ஒத்திவைப்பு

மஹிந்த முன்வைத்த மாடறுப்பு யோசனை திடீரென ஒத்திவைப்பு

இறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடை செய்வது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுப்பதை அரசாங்கம் ஒருமாத காலத்துக்கு ஒத்திவைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெலல இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் தொடர்புபட்ட குழுக்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் தனது கருத்தை முன்வைத்திருந்தாரென அவர் தெரிவித்துள்ளார்.

மாடுகளை இறைச்சிக்காக கொல்வதை தடை செய்யப்போவதாக பிரதமர் தெரிவித்திருந்தாரென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை எப்போது சமர்ப்பிப்பது என்பதை பிரதமர் தீர்மானிப்பாரென அமைச்சர் தெரிவித்துள்ளார்.