கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்...!
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் கீழ் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளதால் பாடசாலை விளையாட்டுக்களை மீள ஆரம்பிப்பதற்கு பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டியினை எதிர்வரும் தினங்களுக்குள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கான விளையாட்டு போட்டிகளை ஆரம்பிப்பதற்காக சுகாதார வழிகாட்டுதல்கள் கல்வி அமைச்சிடம் நேற்று கையளிக்கப்பட்டது.
இதற்கமைய, குறித்த சுகாதார வழிகாட்டுதல்களை மாகாண கல்வி திணைக்களத்திற்கு அனுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.